Related Post

Saturday, 11 April 2015

நல்லதொரு சிறுவனை அறிமுகப்படுத்திய மனநிறைவோடு பகிர்கிறோம்..


சினிமா நடிகர்களை கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு இந்த சிறுவனைப் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ளுங்கள்....

சக நண்பர்களுடன் வேனில் பள்ளிக்கு போய்க்கொண்டு இருந்தபோது, வேன் திடீரென தீபிடித்தது. டிரைவர் வேனில் இருக்கும் பள்ளி சிறுவர்களைப் பற்றி கவலைப்படாமல் கதவை திறந்து கொண்டு தப்பி ஓடிவிட்டார், ஆனால் ஓம் பிரகாஷ் பயத்தில் அரற்றிய நண்பர்களை காப்பாற்ற கதவை உடைத்து ஒவ்வொரு மாணவனாக காப்பாற்ற துவங்கினான்.

கடைசி நேர முயற்சியின் போது கார் கதவின் ரப்பரில் இருந்த தீ ஓம்பிரகாஷின் கன்னத்திலும், முதுகிலும் பட்டு பயங்கரமாக எரிந்தது, ஆனால் அந்த வலியையும், வேதனையையும் விட தன் நண்பர்கள் உயிரே பெரிதென நினைத்த ஓம்பிரகாஷ் நண்பர்களை காப்பாற்றி வெளியே வரவும், வேன் முழுமையாக எரிந்து நாசமானது.

தனக்கு தீக்காயம் ஏற்பட்டவுடன் பயந்து போய் பாதியிலேயே தனது முயற்சியை கைவிட்டு இருந்தாலோ நிச்சயம் ஒன்றிரண்டு மாணவர்களை தீக்கு பலி கொடுக்கவேண்டி இருந்திருக்கும். கேஸ் சிலிண்டர் ஓடும் வேன் என்பதால் எந்த நேரமும் வெடித்து சிதறும் அபாயமும் இருந்தது.
இதையெல்லாம் பொருட்படுத்தாமல் சிறு காயங்களுடன் தனது நண்பர்களை காப்பாற்றி விட்ட பெருமிதத்துடன் நின்ற ஓம்பிரகாஷ்க்கு அப்போதுதான் முகத்தில் ஏற்பட்ட தீவிபத்தின் கொடூரம் புரிய ஆரம்பித்தது. இதற்குள் அக்கம், பக்கத்தில் இருந்து திரண்டு விட்ட மக்கள் அவனை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். நீண்ட சிகிச்சைக்கு பிறகு ஓம் பிரகாஷ் உயிருக்கு ஆபத்தின்றி பிழைத்துக்கொண்டாலும், நடந்த சம்பவம் காரணமாக ஏற்பட்ட வடு அழிக்கமுடியாத அளவிற்கு அவனது முகத்தை சிதைத்து இருந்தது.

ஆனால் அதைப்பற்றி கவலைப்படவில்லை தன்னால் உயிர் பிழைத்த நண்பர்களும், அவரது பெற்றோர்களும், உறவினர்களும் மற்றுமுள்ள பள்ளி நண்பர்களும், ஆசிரியர்களும் பூங்கொத்துடன் தன்னை சந்தித்து வாழ்த்து கூறியதையும், கண்ணீருடன் நன்றியை பகிர்ந்து கொண்டதையுமே பெருமையாக நினைத்தான்.

இவனைப் பெற்றவர்கள் பெருமையாக நினைத்தார்கள், இதையும் தாண்டி சிறுவர்களுக்காக வழங்கப்படும் நாட்டின் வீரதீர சாகச செயலுக்கான (நேஷனல் பிரேவரி அவார்டு) விருதினை ஜனாதிபதி வழங்கி கவுரவித்தார்.

Monday, 30 March 2015

ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்...?


1.அதிகாலை பனியில் நனைந்த படியே கோலம் போடும் போது.

2.தாவணிக் கோலத்தில் சுபநிகழ்ச்சிகளில் அங்கும் இங்கும் வளம் வரும்போது.

3.பேச்சில் ஆங்கிலம் கலக்காமல் , படிக்காதவர்களிடம் அவர்களுக்கு புரியும் விதத்தில் தெளிவாக பேசும் போது.

4.அழகை திமிராக காட்டாமல், ஆண்களை மதித்து நடக்கும் போது.

5.யார் மனதையும் புண்படுத்தாமல் , தன் மனதில் இருப்பவனின் கை பிடிக்க எவ்வளவு நாள்? என்றுக் கேள்வியே கேட்காமல் காத்திருக்கும் போது.

6.அச்சப் பட வேண்டிய இடங்களில் மட்டும் அச்சப்பட்டு கம்பீரமாய் இருக்க வேண்டிய இடங்களில் கம்பீரமாய் இருக்கும் போது.

7.காதில் இருக்கும் கம்மல் தன் பேச்சுக்கு தாளம் போடும் படி, தலையை ஆட்டி ஆட்டி பேசும் போது.

8.தம்பி தங்கைகளுக்கு இன்னொரு தாயாய் இருக்கும் போது.

9.தந்தையின் குடும்ப கஷ்டத்தில் பங்கெடுத்துக் கொள்ளும் போது.

10.ஆபாசமில்லாத உடையணிந்து அழகை எப்போதும் மறைத்தே வைத்திருக்கும் போது.

11.ஆண்கள் கூட்டத்தை கடக்கும் போது,நம்மை ஏதேனும் சொல்லி கிண்டலடித்து விடுவார்களோ என்று மனதில் ஆயிரம் கேள்விகளை சுமந்த படியே செல்லும் போது.

12.சமைக்கத் தெரியாது என்பதை பெருமையாக சொல்லாமல், அன்னமிடுவதில் அன்னையாய் இருக்கும் போது.

# தன்னலமில்லாத, செயற்கைத் தனமில்லாத எல்லா பெண்களுமே அழகு தான்

இந்த தந்தையின் அறிவுரை அவரது மகள் போன்ற உங்கள் அனைவருக்கும் தேவை.தந்தை : இந்த கவர் மற்றும் ஸ்கிரீன் கார்டுக்கு என்ன விலை??

மகள் : Rs 4000 தான் அப்பா 

தந்தை : என்னது நாலாயிரமா??

மகள் : ஆமாம் அப்பா. 40,000-க்கு phone வாங்கி இருக்கோம் அது பத்திரமா இருக்க 4000 செலவு பன்றதுல என்ன இருக்கு??
இதெல்லாம் ஒரு பிரச்சனையா??

தந்தை :ஏமா 40,000-க்கு போன் வாங்கிருக்க அது பத்திரமா இருக்க அதை தயாரித்தவர்கள் எந்த பாதுகாப்பும் செய்யாமலேயேவா வித்தாங்க??
நாம அதுக்கு வேற தனியா செய்து கொள்ள வேண்டுமா?
மகள் : என்னப்பா?? அவங்க போன் தயாரித்து தான் குடுப்பாங்க அதை நாமதான் பத்திரமா வைத்துக் கொள்ளணும். அது மட்டும் இல்லப்பா பாருங்க இந்த கவர் போட்டதும் போன் இன்னும் எவ்ளோ அழகா இருக்கு??
இந்த ஸ்கிரீன் கார்டு போன்-ல கீறல் விழாம பாத்துக்கும் அப்பா
தந்தை : அப்படியா??
ஏம்மா நீ இந்த phone-யை விட எவ்வளவு அழகா இருக்க??
இந்த போன்-ஐ பாதுகாக்கிறியே
ஏன் மா உன்னை பாதுகாக்க மாட்டேங்கிற??
நான் உன்னை உன் உடலை மறைக்குமாறு உடை போடச் சொல்லிக் கொண்டே இருக்கேன். நீ போடவே மாட்டேங்கிற??
இந்த போன விட நீ விலைமதிப்பு இல்லாதவளா ?இது உனக்கு தெரியவில்லையா??
இந்த கவர் போட்டதும் போன் எவ்வளவு அழகா இருக்கு ஆனா நீ முழுமையான உடை அணிந்தால் இன்னும் எவ்வளவு அழகா இருக்கும்??
அது தீய பார்வைகள் உன்னை தீண்டாமல் பார்த்துக் கொள்ளும் அல்லவா??
யாரோ ஒருவர் தயாரித்த இந்த தயாரிப்பிற்கே நீ இவ்வளவு பாதுகாப்பு தர நினைக்கும் போது
எல்லாம் வல்ல இறைவன் படைத்த என் மகளான உன்னை நான் பாதுகாக்க வேண்டாமா??
இந்த phone-ஐ விட நீதான் பொக்கிஷமானவள் முதலில் முழுமையான உடை போட்டு உன்னை பாதுகாத்து கொள் என்று கூறினார்.
இந்த தந்தையின் அறிவுரை அவரது மகள் போன்ற உங்கள் அனைவருக்கும் தேவை. எனவே தான் இதை இங்கே பதிவு செய்கிறேன்

மனிதன் இறந்து 36 மணி நேரத்தில் நடப்பது என்ன ?


மனிதன் இறந்து 36 மணி நேரத்தில் ஈக்கள் முட்டை இடுகின்றன உடலில்

60 மணி நேரத்தில் லார்வாக்கள் தோன்றுகின்றன.

3 நாட்களில் நகங்கள் கழன்று விடுகின்றன.

4 நாட்களில் ஈறுகள் தொலைகின்றன.

5 நாட்களில் திரவமாய் உருகுகிறது மூளை.

6 நாட்களில் வாயுக்களால் வெடிக்கிறது வயிறு.

2 மாதங்களில் உடல் உருகி திரவமாகின்றது.

இறந்த பிறகு இப்படி மனிதனின் உடல் பாகங்கள் சிதைந்து போக,
எதற்கு இந்த தலைகணம், கோபம், ஆணவம், ஆடம்பரம், கொலை வெறி,கௌரவம், ஜாதி மத சண்டைகள் …???
மனித பிறப்பு மிக .அறியப் பிறப்பு ..அதை வாழும் காலத்தில் அனைவரிடமும் அன்புடனும் பண்புடனும் ஆதரவுடனும் நடந்து கொள்வோமே.....

சிரிக்க மட்டும் (ஆசிரியர் , மாணவன் நகைச்சுவை):-


ஆசிரியர்: நம்ம தமிழ் பிறந்தது மதுரையில்.

வாண்டு பாபு: எந்த ஆஸ்பத்திரில சார்?

ஆசிரியர்: ???? gasp emoticon gasp emoticon

---------------------------------------

ஆசிரியர் : 1869ம் ஆண்டுல என்ன நடந்தது?

வாண்டு பாபு : எனக்கு தெரியாது சார்.

ஆசிரியர் : முட்டாள்... அந்த வருடம்தான் காந்திஜி பிறந்தார். சரி, அடுத்த கேள்வி. 1873ம் ஆண்டு என்ன நடந்தது?

வாண்டு பாபு : காந்திஜிக்கு நாலு வயசு நடந்தது சார்!

ஆசிரியர் : ??? gasp emoticon gasp emoticon

------------------------------------------------

டீச்சர்: பாபு.. காது கேக்காதவர்களை நாம் எப்படி கூப்பிடுவோம்?

வாண்டு பாபு: அவங்களுக்குதான் காது கேக்காதே. எப்படி கூப்பிட்டா என்ன?

டீச்சர்:???? gasp emoticon gasp emoticon

-----------------------------------------

ஆசிரியர் : தண்ணீரின் கெமிக்கல் பார்முலா என்ன?

வாண்டு பாபு: HIJKLMNO.

ஆசிரியர் : என்ன பதில் இது?

வாண்டு: நீங்கதானே முந்தின வகுப்புல 'H to O' னு சொன்னீங்க.

ஆசிரியர் : .............??? gasp emoticon gasp emoticon

--------------------------------------

ஆசிரியர் : மூன்றாம் உலகப் போர் வந்தால் என்ன ஆகும் ?

வாண்டு பாபு: (சோகமாக) வரலாறில் இன்னும் நிறைய படிக்க வேண்டி இருக்கும்.

ஆசிரியர் : ??? gasp emoticon gasp emoticon

----------------------------------------------

ஆசிரியர்: பாபு, எந்த மாசத்துல 28 நாள் இருக்கும்?

வாண்டு பாபு: எல்லா மாசத்துலயும் 28 நாள் இருக்கும்!

ஆசிரியர்: ???? gasp emoticon gasp emoticon

Brothers & Sisters இதை முழுமையாக படியுங்கள்


மகள் தான் புதிதாக வாங்கிய I Phoneயை தனது தந்தையிடம் காட்டுவதற்காக வருகிறார்.
அவள் அந்த Phone-ற்கு வெளியுறையும் (cover) , Screen card-ம் கூட வாங்கி போட்டுள்ளார்

தந்தை : இந்த போன் எவ்ளோமா??

மகள் : Rs 40,000 அப்பா

தந்தை : இந்த கவர் மற்றும் ஸ்கிரீன் கார்டுக்கு என்ன விலை??

மகள் : Rs 4000 தான் அப்பா

தந்தை : என்னது நாலாயிரமா??

மகள் : ஆமாம் அப்பா. 40,000-க்கு phone வாங்கி இருக்கோம் அது பத்திரமா இருக்க 4000 செலவு பன்றதுல என்ன இருக்கு??
இதெல்லாம் ஒரு பிரச்சனையா??

தந்தை :ஏமா 40,000-க்கு போன் வாங்கிருக்க அது பத்திரமா இருக்க அதை தயாரித்தவர்கள் எந்த பாதுகாப்பும் செய்யாமலேயேவா வித்தாங்க??
நாம அதுக்கு வேற தனியா செய்து கொள்ள வேண்டுமா?

மகள் : என்னப்பா?? அவங்க போன் தயாரித்து தான் குடுப்பாங்க அதை நாமதான் பத்திரமா வைத்துக் கொள்ளணும். அது மட்டும் இல்லப்பா பாருங்க இந்த கவர் போட்டதும் போன் இன்னும் எவ்ளோ அழகா இருக்கு??
இந்த ஸ்கிரீன் கார்டு போன்-ல கீறல் விழாம பாத்துக்கும் அப்பா

தந்தை : அப்படியா??

ஏம்மா நீ இந்த phone-யை விட எவ்வளவு அழகா இருக்க??
இந்த போன்-ஐ பாதுகாக்கிறியே
ஏன் மா உன்னை பாதுகாக்க மாட்டேங்கிற??

நான் உன்னை உன் உடலை மறைக்குமாறு உடை போடச் சொல்லிக் கொண்டே இருக்கேன். நீ போடவே மாட்டேங்கிற??

இந்த போன விட நீ விலைமதிப்பு இல்லாதவளா ?இது உனக்கு தெரியவில்லையா??

இந்த கவர் போட்டதும் போன் எவ்வளவு அழகா இருக்கு ஆனா நீ முழுமையான உடை அணிந்தால் இன்னும் எவ்வளவு அழகா இருக்கும்??
அது தீய பார்வைகள் உன்னை தீண்டாமல் பார்த்துக் கொள்ளும் அல்லவா??

யாரோ ஒருவர் தயாரித்த இந்த தயாரிப்பிற்கே நீ இவ்வளவு பாதுகாப்பு தர நினைக்கும் போது
எல்லாம் வல்ல இறைவன் படைத்த என் மகளான உன்னை நான் பாதுகாக்க வேண்டாமா??

இந்த phone-ஐ விட நீதான் பொக்கிஷமானவள் முதலில் முழுமையான உடை போட்டு உன்னை பாதுகாத்து கொள் என்று கூறினார்.

இந்த தந்தையின் அறிவுரை அவரது மகள் போன்ற உங்கள் அனைவருக்கும் தேவை. எனவே தான் இதை இங்கே பதிவு செய்கிறேன்.

"நிலவின் அழகானது மேகங்கள் அதை மூடி மறைத்து வைத்திருப்பதால்தன் அழகு அதிகரிக்குமே தவிர சிறிதும் குறையாது , அதுபோல ஒரு பெண்ணின் அழகு என்பது போன்றவற்றால் அதிகரிக்குமே தவிர குறையாது. இதைபுரிந்து நடந்து கொள்ளுங்கள் சகோதரிகளே. சகோதரர்களும் உங்கள் வீட்டு பெண்களிடம் கூறி புரிய வையுங்கள்.


Related Posts Plugin for WordPress, Blogger...

Visitors Hit Now

Sponsers